விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி 5 பேர் பலி.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முண்டியம்பாக்கத்தில் கூட்ரோடு பகுதியில் எதிரெதிரே வந்து கொண்டிருந்த இரண்டு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதியதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் பலியாகினர்.
இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை