Header Ads

  • BREAKING



    விஜய் மல்லையா சொகுசு விமானம் 3-வது முறையாக ஏலம் :சேவை வரித்துறை நடவடிக்கை.

    மும்பை, ரூ.535 கோடி சேவை வரி பாக்கியை வசூலிக்க விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை 3-வது தடவையாக ஏலம் விடும் முயற்சி இன்றும்,(28-11-16) நாளையும் (29-11-16)நடக்கிறது.சொகுசு விமானம்விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை பெற்றுக்கொண்டு லண்டனுக்கு தலைமறைவாகி விட்டார். மேலும் அவர் சேவை வரித்துறைக்கு ரூ.535 கோடி வரி பாக்கி வைத்துள்ளார்.இந்த பாக்கியை மீட்கும் நடவடிக்கையாக, விஜய் மல்லையா பயன்படுத்தி வந்த சொகுசு விமானத்தை ஏலம் விடும் முயற்சியில் சேவை வரித்துறை ஈடுபட்டு வருகிறது. இதற்காக சொகுசு விமானத்தின் ஏல ஆரம்ப தொகை ரூ.152 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ.1 கோடியே 9 லட்சத்துக்கு மட்டுமே ஏலம் எடுக்க ஒருவர் முன்வந்தார். இதையடுத்து 2-வது தடவையாக கடந்த ஆகஸ்டு மாதம் ஏலம் விடும் முயற்சி நடந்தது. அப்போது ரூ.27 கோடிக்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டது.3வதாக மீண்டும் முயற்சி2 தடவை ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, ஆரம்ப தொகையை மறுஆய்வு செய்யுமாறு மும்பை ஐகோர்ட்டு சேவை வரித்துறையை அறிவுறுத்தியது. ஆனால் ஆரம்ப ஏல தொகையை குறைத்தால், அது ஏல நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சேவை வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எனவே விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் இன்றும் நாளையும் 3-வது முயற்சியாக ஏலம் விடப்படுகிறது.

    மின்னணு ஏல நடைமுறை கையாளப்படுவதாகவும், இதில் உலகளாவிய அளவில் பலர் பங்கேற்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் சேவை வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad