Header Ads

  • BREAKING



    ரூபாய் நோட்டு மாற்றியதில் முறைகேடு: 3 அஞ்சலக ஊழியர்கள் மீது வழக்கு.

    ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை முறைகேடாக மாற்றியதாக அஞ்சலக ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. எனினும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
    பொதுமக்கள், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஹைதராபாதில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் அண்மையில் அனுப்பப்பட்டன.
    இந்நிலையில், அந்த அஞ்சலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக உள்ள சுதீர் பாபு, ஊழியர்கள் ரவி தேஜா மற்றும் ரேவதி ஆகிய 3 பேரும் புதிய நோட்டுகளை மக்களுக்கு விநியோகிக்காமல், அவற்றை எடுத்துச் சென்று அதற்குப் பதில் பழைய நோட்டுகளை வைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக அந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad