விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் 3D கேமரா ஸ்மார்ட்போன்கள்.
புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் தற்போது முப்பரிமாண (3D) புகைப்படங்களை எடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஐபோன் 8’ மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.
‘ஆப்பிள் ஐபோன் 8’ ஸ்மார்ட்போனில் 3D கேமரா தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. முப்பரிமாண புகைப்படங்களை உருவாக்கும் ‘ஸ்டீரியாஸ்கோபிக்’ தொழில்நுட்பத்தை எல்.ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘எல்.ஜி’ நிறுவனம் தனது தயாரிப்பான ‘ஆப்டிமஸ் 3டிபி920’ கைபேசியில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் இரட்டை புகைப்படக் கருவிகளை எல்.ஜி நிறுவனம் தான் தற்போது வழங்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் இரட்டை புகைப்படக்கருவியில் பொருட்களின் அளவு மற்றும் கோணங்கள் துல்லியமாக அளவிடப்படுவது மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தபிறகு அவற்றின் போகஸை மாற்றி, தெளிவாக்கிக் கொள்ளலாம். மேலும் ‘ஐபோன் 8’ ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அலுமினிய உலோக உறையினால் உருவக்கபட்டுள்ள ‘ஐபோன் 8’ ல் ஓல்இடி தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை ஆப்டிகல், கைரேகை சென்சார், ஆப்டிகல் சூம் போன்ற நேர்த்தியான புதிய தொழில்நுட்பங்களுடன் ஐபோன் 8 அடுத்த ஆண்டு சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை