Header Ads

  • BREAKING



    முறைகேடாக டீசல் விற்றதாக புகார்: அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உள்பட 4பேர் "சஸ்பெண்ட்"

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தம்மம்பட்டியில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து, தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர் மற்றும் பல மலைப்பகுதிகளுக்கு 27-பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இப்பெருந்துகளுக்கு, தம்மம்பட்டி கிளை பணிமனை வளாகத்தில் உள்ள 'பங்க்'கில் இருந்து, டீசல் வழங்கப்படும். அதில், டீசல் இருந்து டீசல் முறைகேடாக வெளியில் எடுத்துக்கொண்டுபோய் விற்பதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து, கடந்த, 23-ஆம் தேதி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பறக்கும்படை அலுவலர்கள் குழு, தம்மம்பட்டி கிளை பணிமனையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, மூன்று பேரல்களில், 200-லிட்டர் டீசல் தனியாக பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. பறக்கும்படை குழுவினர், 200 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, தம்மம்பட்டி கிளை மேலாளர் சுரேஷ், பணிமனை பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் அரசு, மணிவண்ணன், பஸ்களுக்கு டீசல் பிடிக்கும் பணியாளர் குணசேகரன் ஆகியோரிடம், முறைகேடாக டீசல் விற்ற புகார் குறித்து, தனித்தனியே விசாரித்து, மேல்நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், தம்மம்பட்டி கிளை மேலாளர் சுரேஷ் உள்பட, நான்கு பேரையும், சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பாண்டியன், "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad