Header Ads

  • BREAKING



    ஏ.டி.எம்.மில் புதிய 500 ரூபாய் நோட்டு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.

    புதுச்சேரி: புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதுச்சேரிக்கு வந்ததையடுத்து, சிட்டி யூனியன் வங்கியில், ஏ.டி.எம்., மையம் மூலம் வாடிக்கையாளர்கள் கைக்கு கிடைத்தன.கறுப்புப் பணத்தை ஒழிக்க, 8ம் தேதி இரவு, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக, புதிய, 2,000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே உடனடியாக புழக்கத்திற்கு விடப்பட்டன. புதிய 500 ரூபாய் நோட்டு புதுச்சேரிக்கு வரவில்லை, ரூ. 100, ரூ. 50 நோட்டுகளுக்கு வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள், வங்கிகளுக்கும், ஏ.டி.எம்., மையங்களுக்கும் நடையாய் நடந்து, கடும் அவதியடைந்து வருகின்றனர்.புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் என்பதால், புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என, மக்கள் காத்திருந்தனர்.இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இருந்து, ராணுவ விமானம் மூலம், ௧௪ டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள், 25ம் தேதி சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்தது.அங்கிருந்து, சென்னையில் உள்ள வங்கிகளின் தலைமை அலுவலகம் மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, தமிழகம், புதுச்சேரியில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன.புதிய 500 ரூபாய் நோட்டுகள், கடந்த 28ம் தேதி புதுச்சேரி வங்கிகளுக்கு வந்தது. ஆனால், போதுமான அளவுக்கு வராததால், ஒவ்வொரு வங்கியும் தங்களின் கிளை வங்கிகளுக்கு எவ்வளவு அனுப்புவது, ஏ.டி.எம்., மையங்களில் எவ்வளவு நிரப்புவது என, குழப்பத்தில் இருந்து வருகின்றன.இந்நிலையில், முதல் சோதனையாக, புஸ்சி வீதியில் உளள சிட்டி யூனியன் வங்கியில் ஒரு ஏ.டி.எம்., இயந்திரத்தில், புதிய ௫௦௦ ரூபாய் நோட்டு வைக்கப் பட்டது. பொதுமக்கள் ஆவலுடன் புதிய ரூ. 500 நோட்டுகளை பெற்றனர்.சில மணி நேரம் மட்டுமே, அதில் நிரப்பப்பட்ட பணத்தை பெற முடிந்தது. பிற வங்கிகளில் இன்று (30ம் தேதி) முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad