அரசு ஐ.டி.ஐ.யில் பணிமனை உதவியாளர் பணி: டிசம்பர் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆதிதிராவிடர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானோர் வரும் டிச.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
சென்னை செங்குன்றம் அரசு ஆதிதிராவிடர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் பணியாளர், பொருத்துநர், கம்மியர் (மோட்டார் வாகனம்) ஆகிய பிரிவுகளில் 3 பணிமனை உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு தகுதியானோர் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.
மேலும், பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எனவே தகுதியானோர் தங்களைப் பற்றிய முகவரி, தகுதி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட முழு விவரங்களுடன் அரசு ஆதிதிராவிடர் தொழிற்பயிற்சி நிலையம், செங்குன்றம், சென்னை என்ற முகவரிக்கு டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை