Header Ads

  • BREAKING



    சாலையோரத்தில் வசித்த 76 குடும்பங்களுக்கு வீடுகள்.

    சென்னை பாரிமுனை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்த 76 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இவர்களுக்கு, திருவொற்றியூர் எர்ணாவூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகள் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
    பாரிமுனை பகுதியில் என்.எஸ்.சி. போஸ் தெருவில் சாலையோரங்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த சுமார் 76 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, திருவொற்றியூர் எர்ணாவூர் குடியிருப்பில் அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.
    முன்னதாக, அங்கிருந்து மாநகராட்சி லாரிகளில் அகற்றப்பட்ட குடும்பத்தினருடன் அவர்களது வீட்டுச் சாமான்கள் ஏற்றி வரப்பட்டன.

    ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் போதுமானதான இல்லை எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த மாநகராட்சி மற்றும் காவல்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து சமாதானப்படுத்தியதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad