Header Ads

  • BREAKING



    கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியர்கள் மீது சிறார்கள் தாக்குதல்: காயமடைந்த ஆசிரியர்களுக்கு சிகிச்சை.

    செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் தாக்கியதில் காயமடைந்த ஆசிரியர்கள் 3 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    செங்கல்பட்டு சிறுவர் சிறப்பு இல்லத்தில் (கூர்நோக்கு) 48 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பகலில் விளையாட்டு, கலைத்திறன்களை வளர்ப்பது, பாடம் கற்பிப்பது வழக்கம். பின்னர் இரவு நேரத்தில் இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளே அடைத்து வைக்கப்படுவர்.
    திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பகல் நேர பணிகள் முடிந்தவுடன் இல்ல வளாகத்தில் சுற்றித்திரிந்த மாணவர்களை அறைக்குச் செல்லும்படி மனோதத்துவ ஆசிரியர்கள் துளசி ராமன், விஜயசாரதி மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் தொடர்ந்து கூறியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்களை பயங்கரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
    இதில் காயமடைந்த 3 ஆசிரியர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad