Header Ads

  • BREAKING



    கூலி உயர்வு கோரிக்கை: அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம்.

    சிகாகோ:கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு உணவு விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள், குழந்தை நல காப்பகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் சிகாகோ, டெட்ராய்ட், லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.போராட்டம் தொடரும்இந்த போராட்டம் இனி வரும் நாட்களில் தொடரும் என்று போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். சிகாகோ ஓ ஹேர் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் மற்றும் சான் பிரான்சிஸ்கோ டிரைவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மெக் டொனால்டு உணவு விடுதியின் ஊழியர்கள் ஆயிரம் பேர் வேலை கைவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் 350-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad