பிரேஸில் விமான விபத்து, கருப்புப் பெட்டிகள் மீட்பு.
பிரேஸிலில் விபத்திற்குள்ளான விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
பிரேஸில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் சென்ற பயணிகள் விமானம் திங்கள்கிழமை இரவு கொலம்பியாவில் மலை மீது மோதி நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 76 பேர் உயிரிழந்தனர். கால்பந்து வீரர்கள் 3 பேர், விமான ஊழியர் ஒருவர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த பிறகே விமான விபத்திற்கான முழுமையான காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை