Header Ads

  • BREAKING



    ம.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல்; போலீசாரை கண்டித்து சாலை மறியல்.

    ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கடத்தூர் எஸ்.எஸ்.ஐ., பழனிசாமி தலைமையிலான போலீசார், மாக்கினாங்கோம்பை பிரிவில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் வாகனச்சோதனை செய்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை நிறுத்தி, விசாரணையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அரசூரை சேர்ந்த ம.தி.மு.க., விவசாய அணி செயலாளர், நடராஜ்(வயது-55) என்பவர் தந்து, 'மாருதி 800' காரில் சென்றார். சோதனைக்காக அவர் காரை, கான்ஸ்டபிள் நிறுத்துமாறு டார்ச் லைட் அடிக்கவே, லாரியை ஒட்டி நிறுத்தியுள்ளார்.

    அப்போது எஸ்.எஸ்.ஐ., மீது மோதுவது போல் கார் சென்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.எஸ்.ஐ., அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடராஜ், கோபி தனியார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். 

    இந்நிலையில் அரசூர் பகுதி மக்கள், நேற்று காலை, 10:30 மணியளவில், சாலை மறியிலில் ஈடுபட்டனர். எஸ்.எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த கோபி டி.எஸ்.பி., செல்வம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிறப்பு உதவி ஆய்வளர், பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறவே, மறியல் கைவிடப்பட்டது. இதனால் கோபி - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad