Header Ads

  • BREAKING



    பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய பயங்கரவாத தலைவன் கைது.

    புதுடில்லி : பஞ்சாப் சிறையிலிருந்து நேற்று தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை டில்லியில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா வில் உள்ள சிறைக்குள், போலீஸ் உடையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள், கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, காலிஸ் தான் விடுதலை முன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹர்மிந்தர் மின்டூ, உட்பட, ஐந்து பேருடன் தப்பிச் சென்றனர். தப்பியோடிய கும்பல் குறித்து, நம்பகமான தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டில்லி பதுங்கி இருந்த ஹர்மிந்தரை போலீசார் இன்று காலை சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad