லஞ்சம் வாங்கிய புகாரில் சென்னை சுங்கத்துறை ஆணையர் மீது அதிரடியாக சி.பி.ஐ.வழக்கு பதிவு.
சென்னை சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் ஜானகி அருண்குமார், அரசு சார்ந்த எல்லா பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக சி.பி.ஐ.அலுவலகத்தில் ரகசியமாகப் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜானகி அருண்குமாரை கண்காணித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று அவரது அலுவலகம், வீடு மற்றும் அவரது உறவினர் வீடு என மொத்தம் ஏழு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது, சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை