எனை நோக்கி பாயும் தோட்டா'.. புதுமையான தோற்றத்துடன் தனுஷ்..!
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இதில் ஸ்டைலிஷ்-ஆன தனுஷின் கெட்டப் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கவுதம்மேனன்-தனுஷ் முதன்முறையாக இணையும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் இரண்டு வித கெட்டப்பில் தனுஷ் தோன்றுகிறார். அதில், ஒன்றில் மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார். கவுதம்மேனன் படங்கள் என்றாலே அழகும் ஆங்கிலமும் அதிகமாக இருப்பது நமக்குத் தெரியும். அப்படி இருக்க பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அழகை காட்டிய கவுதம், படத்தில் எந்த அளவுக்கு அங்கிலத்தை புகுத்தி இருப்பார் என இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனுஷ் இதுபோன்ற ஸ்டைலிஷான கேரக்டரில் முதல் முறையாக நடிப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த பர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுடன் இணைந்து கவுதம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை