Header Ads

  • BREAKING



    குற்றப்பின்னணியாளர்களை வரும் உள்ளாட்சி தேர்லில் முன்னிருத்த கூடாது - உயர்நீதிமன்றம்.

    குற்றப்பின்னணி உடையவர்களை வரும் உள்ளாட்சி தேர்லில் முன்னிருத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு சுற்றிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலின் அரசானையை ரத்து செய்தும், மேலும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 பரிந்துரைகளையும் உத்தரவாக பிறப்பித்தார்.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் கடந்த வாரம் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்தபின், டிசம்பர் மாத இறுதிக்குள் மறுதேர்ரலை நடத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேட்பாளரின் குற்றப்பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என உத்தரவை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா? என்று தேர்தல் ஆணையத்திக்கும்,தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பி இன்று பதிலளிக்க உத்தாரவிட்டிருந்தார்.

    இதையடுத்து வழக்கு விசாரணை இன்று நீதிபதி கருபாகரன் முன்பு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பு ஏற்கனவே தேர்தல் நடத்த பின்பற்றப்பட்ட நடைமுறைகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் தேர்தலை டிசம்பர் 31 தேதிக்குள் நடத்தி முடிக்கவாய்ப்பு குறைவு என்று நீதிபதி பிறபித்த பரிந்துரைகளை அமல்படுத்தி வருவதாகவும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து நீதிபதி எவ்வளவு விரைவாக விதிமுறைகளை அமல்படுத்தி தேர்தலை நடத்தி முடிக்க நீதிபதி அறிவுரை.குற்றப்பின்னனி உள்ளவர்களை தகவல்களை,பிரமாண பத்திரத்தையும் இந்த உள்ளாட்சி தேர்தலை இணையத்தில் பதிவேற்றமுடியாது இணையதளம் முடங்கும் அபாயம் உள்ளது என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது . அதற்கு நீதிபதி மாவட்ட,தாலுக்கா வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நீதிபதி யோசனை கூறினார்.

    குற்றப்பின்னணி உள்ளவர்களை முன்னிருத்தாதீர்கள் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்துவது இந்த தேர்தலில் சாத்தியம அல்ல என கூறிய தேர்தல் ஆணைய தரப்பு பதில் அளித்தது. அரசியல் கட்சிகளுக்கு சுற்றிக்கை அனுப்பவது குறித்து தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற மறுத்த நீதிபதி, இந்த தேர்தலில் நிச்சயம் அமல்படுத்த வேண்டும் என நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் இடஒதிக்கீடு தொடர்பான பல்வேறு வழக்குகளை முடித்துவைத்த நீதிபதி.இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad