1300 கோடி சொத்துக்கு அதிபதியான குஜராத் கந்துவட்டிக்காரர் குடும்பத்துக்கு 56 வங்கி கணக்குகள்.
அகமதாபாத்: ரூ.1300 கோடிக்கு அதிபதியான குஜராத் கந்துவட்டிக்காரர் குடும்பத்துக்கு 56 வங்கி கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிஷோர் பாஜியவாலா. கந்துவட்டிக்காரார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.1300 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ரூ.1.45 கோடி புதிய ரூ.2000 நோட்டுகள், ரூ.1.48 கோடி தங்கக்கட்டிகள், ரூ.4.9 கோடி தங்க நகைகள், ரூ.1.39 கோடி வைர நகைகள் உட்பட ரூ.10.45 கோடி கணக்கில் வராத பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூபாய் நோட்டு தடை விவகாரத்திற்கு பின் கிஷோர் பாஜியவாலா சுமார் 700 பேரை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளார். விசாரணையில் பாஜியவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் 56 வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிஐ வழக்குபதிவு செய்தது. கிஷோர் பாஜியவாலா, அவரது மகன்கள் ,வங்கி மூத்த அதிகாரி பங்கஜ்பட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை