போர் கப்பல் கவிழ்ந்து இரண்டு வீரர்கள் பலி, 14 பேர் காயம்.
மும்பை: கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல், ஐ.என்.எஸ்., பெட்வா, திடீரென குடை சாய்ந்ததில், இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர்.நம் கடற்படையில், 2004ல் இணைக்கப்பட்ட போர்க் கப்பல், ஐ.என்.எஸ்., பெட்வா, பராமரிப்பு பணிக்காக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.துறைமுகத்தில் இருந்து பராமரிப்பு தளத்துக்கு, 3,850 டன் எடையுள்ள இந்த போர்க் கப்பல், நேற்று மதியம் புறப்பட்டது. எதிர்பாராதவிதமாக, 126 மீட்டர் நீளமுள்ள இந்தப் போர்க் கப்பல், ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில், கப்பலின் கொடிக் கம்பம், துறைமுக தளத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்தில், இரண்டு வீரர்கள் பலியாயினர்; 14 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை