Header Ads

  • BREAKING



    பயணிகள் வாகன விற்பனை 1.82% அதிகரிப்பு.

    உள்நாட்டில் பயணிகள் கார் விற்பனை சென்ற நவம்பர் மாதத்தில் 1.82 சதவீதம் அதிகரித்தது.
    இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    நடப்பு ஆண்டு நவம்பரில் 2,40,979 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 2,36,664 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 1.82 சதவீதம் அதிகமாகும்.
    கார்கள் விற்பனை 1,73,111 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 1,73,606-ஆக காணப்பட்டது.
    அனைத்து வகையான வாகன விற்பனை சென்ற நவம்பரில் 16,54,407 என்ற எண்ணிக்கையிலிருந்து 5.48 சதவீதம் குறைந்து 15,63,665-ஆக இருந்தது. 
    நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 1,37,07,157 என்ற எண்ணிக்கையிலிருந்து 12.5 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,54,20,035-ஆக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்துர் தெரிவித்ததாவது:
    நாட்டில் 85 சதவீத பயணிகள் வாகன விற்பனை கடனுதவி திட்டத்தின் கீழே நடைபெறுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ஒத்திப் போட்டுள்ளனர். இதன் காரணமாகவே அவற்றின் விற்பனை நவம்பரில் 6 சதவீதம் அளவுக்கு சரிவடைந்தது. அதேபோன்று வர்த்தக வாகனங்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
    கரன்ஸி பிரச்னை தாற்காலிகமானதே. வரும் ஜனவரி முதல் மோட்டார் வாகன விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2-3 மாதங்களில் உண்மையான நிலவரம் தெரியவரும் என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad