சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி சொத்து வரி இழப்பு : உயர்நீதிமன்றத்தில் தகவல்.
சென்னை: கோயம்பேடு வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது சொத்துவரியை மாற்றி அமைக்காததால் ரூ.1,841 கோடி சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு சொத்துவரி நிர்ணயித்ததை எதிர்த்து கோயம்பேடு வணிக வளாக வியாபாரிகள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாநகராட்சிக்கு ஏற்பட்ட சொத்துவரி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் 1998-ம் ஆண்டு முதல் சொத்துவரியை மாற்றி அமைக்காததால் மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி இந்த வருமானம் இல்லாவிட்டால் அடிப்படை வசதிகளை எப்படி நிறைவேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை