Header Ads

  • BREAKING



    தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.


    தூத்துக்குடி, 

    வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வியாழக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டாவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

     வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்வளத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தண்டோரா மூலம்  அறிவிப்பு செய்தனர்.

     இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    இதற்கிடையே, புயல் எச்சரிகை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதன்கிழமை பிற்பகலில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. புயலால் வடமாவட்டங்களில் மட்டுமே அதிக பாதிப்பு இருக்கும் என்பதால், தற்போது 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad