2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூவர் கைது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதிய 2000 ரூபாய்த் தாளைப் போல் போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் நடத்திய ஆய்வில் அபிநவ் வர்மா, விசாகா ஆகியோரையும் மற்றொரு பெண்ணையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் அளவுக்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை