Header Ads

 • BREAKING  2016 டாப் 5: தமிழ் பிளாக் பஸ்டர் படங்கள்.

  2016ல் வசூலைக் குவித்த முதல் ஐந்து படங்களில் முதலிடத்தை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலிதான்.

  மார்க்கெட்டிங் என்றால் இதுதான் என அனைவரையும் `பிரமிக்க வைத்த ப்ரமோஷன்களுடன் வெளியாகி மாஸ் வசூலை குவித்த படம் கபாலி.! வேற லெவல் சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்களை மீண்டும் காலர் தூக்க வைத்த படம். இயக்குனர் பா. ரஞ்சித், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கதைக்களம் என அனைத்தும் இந்தப் படத்தில் ரஜினிக்குப் புதிது. ஆனால் அவரது வசூல் வழக்கம் போலவே வெற்றிகரமாகவே இருந்தது. புதிய குழுவின் மீது ரஜினி வைத்த நம்பிக்கை ரசிகர்களுக்கு புதிய ரஜினியை...இல்லை இல்லை பழைய மாஸ் ரஜினியை கொண்டு சேர்த்தது என்றே கூறலாம். தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணுவின் பிரோமோஷன்கள் கபாலி ரீச்க்கு பெருமளவில் பலம் சேர்த்தது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். டீசர், ட்ரெய்லர், நெருப்புடா உள்ளிட்ட பாடல்கள், செண்ட்டிமெண்ட் காட்சிகள் என அனைத்திலும் பட்டையைக் கிளப்பி இருந்தார் ரஜினி. சென்ற வருடம் வந்த படங்களிலேயே 350 கோடி வசூலித்து வசூலில் முதலிடத்தைப் பெற்றது கபாலி

  தெறி : 2016ல் வெளியான ஒரே விஜய் படம் தெறி. மாஸ் கிளாஸ் என அனைத்து தரப்பினரையும் இந்த படத்தின் மூலம் விஜய் கவர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. இளம் இயக்குனர் அட்லியை முழுமையாக நம்பி விஜய் தன்னை ஒப்படைத்துக் கொண்ட படம். இசை, திரைக்கதை, செண்ட்டிமெண்ட் என ரசிகர்களைக் கவர்ந்தது தெறி. விஜய்யின் போலீஸ் ஆபிசர், கணவன், மகன், அப்பா என அனைத்து கெட்அப்பும் தெறி பேபி தான்...! இந்தப் படத்தின் வசூல் 156 கோடி.

  24 : இந்த வருடத்தின் சர்ப்ரைஸ் திரைப்படம் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் வெளியான 24. தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் பெரும்பாலும் வெளிவருவதில்லை. காரணம் அதற்கு ஆகும் செலவுகள். இப்படியான சூழ்நிலையில் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை களமாகக் கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம் 24. மூன்று வேடங்களில் சூர்யா தனக்கே உரித்தான பாணியில் அசத்தியிருந்தார். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் பாராட்டை அள்ளி குவித்த படம் 24. இந்தப் படத்தின் வசூல் 94.14 கோடி.

  இரு முகன்: வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் என எந்த கமிட்மெண்டும் இன்றி விக்ரம் தனக்கு பிடித்தால் மட்டுமே படங்களை ஒப்புக்கொள்வது வழக்கம். இந்த வருடம் வெளியான விக்ரமின் ஒரே படம் இரு முகன். படத்தலைப்பிற்கு ஏற்றாற் போல விக்ரமிற்கு இரட்டை வேடம். இந்த படத்தில் விக்ரமிற்கு இணையாக நயன்தாராவும் கலக்கி இருந்தார். உடை, மேக் அப் என அனைத்திலும் நயன்தாரா கச்சிதம். சீக்ரெட் ஏஜெண்ட்டாக ஹீரோவாக வரும் விக்ரம் ஸ்மார்ட். அத்துடன் நித்யாமேனன், நயன்தாராவுக்கு இணையாக அழகான திருநங்கை ரோலில் வந்து மிரட்டியிருந்தார் விக்ரம். நாயகிகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக மேக் அப், ஹேர் ஸ்டைல் உடை என திருநங்கை வேடத்தில் விக்ரம் அசத்தி இருந்தார். இந்தப் படத்தின் வசூல் 66 கோடியே 2 லட்சம்.

  ரெமோ: ரஜினி, விஜய் வரிசையில் இந்த ஜெனரேஷன் குட்டீஸ்களுக்கு பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். ரெமோ படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். பிசி ஸ்ரீராம் கேமராவில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் பளிச். வழக்கமான காதல் கதையை அழகான கிஃப்ட் பாக்சில் ரசிகர்களுக்கு பிரசண்ட் செய்த படம் என்ற பெயரைப் பெற்றது ரெமோ. அனிருத் இசை படத்திற்கு கூடுதல் பிளஸ். ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரண்டு சிவகார்த்திகேயன் படங்களும் 2016ல் வசூலை அள்ளியது. இதில் ரெமோவின் வசூல் 60 கோடியே 18 லட்சம்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad