சிரியாவில் விமானப்படை தாக்குதல்: 22 பேர் பலி.
பெய்ரூட்: சிரியாவின் கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் 22 பொது மக்கள் பலியானார்கள்.சிரியாவின் எண்ணெய் வளம் நிறைந்த டேர் எஜ்ஜோர் மாகாணத்தில் ஹோஜ்னா கிராமம் உள்ளது. இங்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான படைகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 22 பொது மக்கள் பலியானார்கள். பலியானவர்கள் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை