கறுப்புப் பணம் மாற்றம், கைதான 27 வங்கி ஊழியர்கள்!
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாறற உதவியதாக 27 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் பல்வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 8ம் தேதி நாட்டில் 500 மற்றும் ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. புதிய 500 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு அவற்றுக்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. புதிய அறிவிப்பால் கறுப்பு பண முதலைகள் பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.சில தனியார் நிறுவன அதிபர்கள் கூட தங்கள் ஊழியர்கள் கணக்கில் வங்கியில் பணம் செலுத்தி பிடிபட்டுள்ளனர். இன்னும் சிலர் நண்பர்களிடம் பணத்தைக் கொடுத்து, வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.
கறுப்பு பணத்தை மாற்ற உதவினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் வங்கி ஊழியர்களை அணுகி, கமிஷன் கொடுத்து புதிய நோட்டுகளை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய அரசு நாட்டில் நேர்மையான பண பிரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தவும் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியை தடுக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த ரெய்டில் சுமார் 5.7 கோடி அளவிற்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகள் அடங்கிய கறுப்பு பணம் பிடிபட்படது. பல மாநிலங்களிலிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப்பில் கமிஷன் பெற்றுக் கொண்டு, புதிய நோட்டுகள் வழங்கிய வங்கி மேலாளர் மற்றும் கேஷியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ஏலூர் என்ற இடத்தில் ரூ.19 லட்சம் பிடிபட்டது. திருப்பதியில் ஒன்றரை கோடியும் கிருஷ்ணா மாவட்டத்தில் ரூ.18 லட்சமும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக கறுப்பு பணம் பிடிபட்டது. சென்னை பெசன்ட் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளை மேலாளர் லோகேஷ்வர ராவ், ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் முகேஷ் உள்ளிட்ட 5 பேர் கமிஷன் பெற்றுக் கொண்டு தொழிலதிபர்களின் ரூ.25 லட்சம் கறுப்பு பணத்தை மாற்ற முயற்சித்து கைதாகியுள்ளனர்.
ஹைதரபாத் நகரில் நடந்த சோதனையில் ரூ.94 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேடக்கில் ரூ. 10 லட்சம் பிடிபட்டது. பிடிபட்ட கறுப்பு பணம் அனைத்தும் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இது தொடர்பாக 17 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய 27 வங்கி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 6 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சீனியர் அதிகாரிகள் எனக் கூறப்பட்டுகிறது.
இதற்கிடையே மகாராஸ்ட்ர மாநிலம் பாராமதி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு மடக்கி சோதனையிட்ட போது, ரூ.6 கோடியே 79 லட்சத்திற்கான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பிடிபட்டது. விசாரணையில் பாராமதி கூட்டுறவு வங்கி கிளையில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு எடுத்து
செல்வதாக கூறினார்கள் எனினும் எந்த ஆவணங்களும் பிடிபட்டவர்களிடம் இல்லை.
கருத்துகள் இல்லை