Header Ads

  • BREAKING



    கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி.

    அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
    இதுகுறித்து மக்களவையில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
    கிராமப் புறங்களில் குடிநீர் விநியோகம், துப்புரவு, மழை நீர் வடிகால், சாலைகள், நடைபாதைகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை அமைப்பது அத்தியாவசியமாகும். மேற்கண்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு 14-ஆவது நிதிக் குழுவின் கீழ் கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதியானது, 2020 ஆம் ஆண்டுக்குள் முடிவடைவதற்குள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad