மின்னணு பணப்பரிமாற்றம் 3 மடங்கு வரை உயர்வு... பிரதமர் மோடி பெருமிதம்.
இந்தியாவில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகள் கடந்த சில நாட்களில் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கடந்த சில நாட்களில் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். மின்னணு முறை ரொக்க பரிமாற்றங்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இளைஞர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பொது மக்களுக்கு ‘லக்கி கிரஹாக் யோஜனா’ மற்றும் வியாபாரிகளுக்கு ‘டிஜி–தன் வியாபாரி யோஜனா’ ஆகிய இரு பரிசுத் திட்டங்கள் இன்று முதல் தொடங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் குறித்து நாடெங்கும் தற்போது சோதனைகள் நடந்து வருவதாகவும், சாமானிய மக்கள் தந்த தகவல்களின் அடிப்படையிலேயே இச்சோதனைகள் நடப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை