பாஜக அமைச்சர் வீட்டு பிரமாண்ட திருமணம், விருந்தினர் வருகைக்கு 50 வாடகை சொகுசு விமானங்கள் ஏற்பாடு.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் மகள் திருமணம் இன்று மாலை நாக்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது.
கட்காரியின் மூன்றாவது மகளான கெட்கி, அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் பணிபுரியும் ஆதித்யா என்பவரை மணமுடிக்க உள்ளார். ஏறக்குறைய 10,000 விருந்தினர்கள் பங்குபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்வானி, அமித் ஷா, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் காந்தி உள்ளிட்ட பெரும் புள்ளிகள் வருவதற்கு மட்டும் 50 சார்ட்டர் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
ரூபாய் நோட்டு பிரச்னையில் மக்கள் திண்டாடி கொண்டிருக்கும் சமயத்தில் இது போன்ற பிரம்மாண்ட திருமணங்கள் வருத்தமளிப்பதாக நெட்டிசன்ஸ் சாடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை