Header Ads

  • BREAKING



    இனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.

    இனி பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.500, 1,000 நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மேலும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.4500 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்த மத்திய அரசு பின்பு, ஒரு நாளைக்கு ரூ.2000 வரை மட்டுமே மாற்ற முடியும் என்று அறிவித்தது. அதுவும் நவம்பர் 24ம் தேதி வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று அரசு அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்பு வெளியிட்டது. அரசு அளித்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில்,இனி பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வங்கியில் மாற்ற முடியாது. ஆனால் ரிசர்வ் வங்கியில் மட்டும் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைப்படி ஒரு நபர், ஒருநாளைக்கு ரூ.2,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

    அதேநேரம் மக்கள் தங்களிடம் உள்ள அனைத்து பழைய ரூ.500, 1000 நோட்டுகளையும் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம். அதன் பிறகு வங்கிக் காசோலை மூலமாகவோ அல்லது ஏடிஎம் வாயிலாகவோ தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad