பணத்தட்டுப்பாடு, இன்னும் மூன்று முதல் 6 மாதம் வரை நீடிக்கும் - நிதியமைச்சர் அருண்ஜேட்லி.
புவனேஸ்வர்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுபாடு இன்னும் மூன்று மாதம் முதல் 6 மாதம் வரை நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இன்று புவனேஸ்வரில் நடந்த் ஒடிசா மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது:- மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அறிவோம். ஆனால் இது ஒரு நீண்ட கால பொருளாதார மாற்றத்தை தரக்கூடியது.
இன்னும் அதிகபட்சமாக ஆறு மாதம் வரை பண நெருக்கடி இருக்கலாம். ஆனால் அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை நாம் காண இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஆதரவு அளித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயகிற்கு அருண் ஜேட்லி நன்றி தெரிவித்தார். இந்த ஆண்டு ஒடிசா 9.2 சதவீதம் உற்பத்தி வளர்சி கண்டுள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் 2 சதவீதத்தைவிட அதிகம் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை