Header Ads

  • BREAKING



    ரூ.600 லஞ்சம்: ஆர்.டி.ஓ. அலுவலக பெண் ஊழியருக்கு ஓராண்டு சிறை.

    வாகனத்திற்கு அனுமதி வழங்க ரூ.600 லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், ஆர்.டி.ஓ. அலுவலக பெண் ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் ஜெ.ராஜலட்சுமி (48). இவரிடம், அஸ்வின் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், நிறுவனத்துக்கு வாங்கிய "மேக்சி கேப்' வாகனத்திற்கு அனுமதி கோரி அணுகியுள்ளார்.
    அவரது வாகனத்துக்கு அனுமதி வழங்க, ராஜலட்சுமி ரூ.600 லஞ்சமாக பெற்றுள்ளார். கடந்த 2008 -இல் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து, லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா, இளநிலை உதவியாளர் ராஜலட்சுமிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அவருக்கு உதவிய சிரில் என்பவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad