Header Ads

  • BREAKING



    ஐதராபாத்தில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் பலி?

    ஐதராபாத்: ஐதராபாத் நகரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் 10 கட்டிட தொழிலாலர்கள் பெயிண்டிங் மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.14 குடும்பத்தினர் சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு குறித்து உடனடி தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறிய ஐதராபாத் நகராட்சி கமிஷ்னர் ஜனார்தன் ரெட்டி, திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் தெரிவித்தார்தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் சைபராபாத் போலீஸ் கமிஷனர் சந்தீப் சாண்டில்யா உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறன்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad