92 பேருடன் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்..!
நடுவானில் 92 பேருடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய போர் விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது.
ரஷ்யாவின் சோச்சி என்ற நகரிலிருந்து புறப்பட்ட டியு-154 ரக போர் விமானம் 92 பேருடன் சென்றது. விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகர் அருகே சென்று கொண்டிருந்த போது ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளாகி கருங்கடலில் விழுந்து நொறுங்கியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் பயணம் செய்த 92 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை