Header Ads

  • BREAKING



    மானியங்கள் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் கிடையாது: மக்களவையில் மத்திய அரசு தகவல்.

    அரசின் மானியங்கள், திட்டப் பலன்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி. சௌத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
    ஒரு தனிநபரிடம் ஆதார் அட்டை இல்லையென்றாலும், அவர் வேறு அதிகாரப்பூர்வமான அடையாள அட்டையை சமர்ப்பிக்கும்பட்சத்தில் அந்த நபருக்கு அரசு மானியங்களும், திட்டப் பலன்களும் அளிக்கப்படும். இந்த விதிமுறையானது ஆதார் சட்டத்தின் 7-ஆவது பிரிவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிலும், "அரசின் திட்டப் பலன்கள் கிடைக்கப்பெறுவதற்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கக் கூடாது' என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
    அதேசமயத்தில், பொது வழங்கல் துறை சார்ந்த திட்டங்களுக்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் அது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தேசிய சமூக உதவித் திட்ட ஓய்வூதியம், ஜன்தன் யோஜனா ஆகிய திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
    ஆதார் அட்டை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உள்பட்டே அரசு நடந்து கொள்கிறது.
    எனவே, அரசின் மானியங்கள், திட்டப் பலன்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என பி.பி. சௌத்ரி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad