Header Ads

  • BREAKING



    சுங்கக் கட்டண வசூல் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் தொடக்கம்.

    பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சுங்கக் கட்டணம் வசூல், வெள்ளிக்கிழமை (டிச. 2) நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்குகிறது.
    இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரி ஒருவர்,
    புதன்கிழமை தெரிவித்ததாவது:
    தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூலை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டண வசூலை மீண்டும் தொடங்க உள்ளோம்.
    மேலும், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, நாடு முழுவதிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் உதவியுடன் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் "ஸ்வைபிங்' இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து சுலபமாக செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
    மத்திய அரசின் உத்தரவுப்படி, சுங்கச் சாவடிகளில் வரும் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாங்கிக் கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
    முன்னதாக, கடந்த 8-ஆம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனினும், சுங்கச் சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
    எனினும், சில்லறை தட்டுப்பாடு காரணமாக சுங்கச் சாவடிகளின் முன்பு பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதையடுத்து, சுங்கக் கட்டண வசூலை நவம்பர் 14-ஆம் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர், அதற்கான காலக் கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad