Header Ads

  • BREAKING



    ஓ.பி.எஸ்., தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

    சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா மறைந்த டிச.,5ம் தேதி இரவு பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக, போயஸ் கார்டனில் சிகலாவுடன், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.'முதல்வர்' புதிய பெயர் பலகை: இந்த சூழ்நிலையில், இன்று ( 10 ம் தேதி) காலை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர்.பின்னர் அவர்கள், ஒரே காரில் தலைமை செயலகம் வந்தனர். அங்கு அமைச்சரவை கூட்டம், 50 நிமிடங்கள் நடந்தது.

    முதலில், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின், மெரீனா கடற்கரையில் அவரது நினைவகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.முதல்வர் பன்னீர்செல்வம், ஏற்கனவே தான் பயன்படுத்தி வந்த நிதி அமைச்சர் அலுவலக அறைக்கு தான் சென்றார். அங்கு, நிதி அமைச்சர் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டு, 'முதல்வர்' என, புதிய பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad