Header Ads

  • BREAKING



    மேற்கு வங்கத்தில் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி.

    புதுதில்லி: மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைமைச் செயலகம் மற்றும் ஹூக்ளி, பர்தாமன், பல்சிட் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் ஏராளமான ராணுவ வீரர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் குவிக்கப்பட்டுள்ள விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. 

    மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி அசாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரவு நேரத்தில் தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக் காட்டினார்.

    அதையும் பொருட்படுத்தாமல் தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் கடந்த ஆண்டும் இதே போன்று ஒத்திகை நடந்ததாகவும் விளக்கம் அளித்தார்.

    இதை ஏற்காத எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் பயிர்காப்பீட்டு திட்டங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார். சேலம் உருக்காலை பிரச்னை குறித்து எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad