Header Ads

  • BREAKING



    ஜியோ சிம்கார்டுகளை டோர்டெலிவரி செய்யும் ஸ்நாப்டீல் .

    ரிலையன்ஸ் ஜியோ சிம்கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே இலவசமாக கொண்டுசேர்க்க இருப்பதாக இணையதள வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் அறிவித்துள்ளது.

    இணையதளம் மூலம் ரிலையன்ஸ் சிம்கார்டுகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம் என்று தெரிவித்துள்ள ஸ்நாப்டீல், அதற்காக ரகசிய குறியீட்டு எண் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவர்களது வீட்டில் ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ஸ்நாப்டீல் பிரதிநிதி ஜியோ 4ஜி சிம்கார்டுகளை டெலிவரி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ புத்தாண்டு சலுகையுடன் அந்த சிம்கார்டுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கேஷ் @ ஹோம் எனும் திட்டம் மூலம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை ஸ்நாப்டீல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad