சென்னை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.
தலைமை செயலகத்தில் உள்ள தலைமைச்செயலர் ராம மோகன ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ்வின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலாளரின் வீட்டை அடுத்து அவரது அலுவலகத்திலும் தற்போது சோதனை நடைபெறுகிறது.தலைமை செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2௦ பேர் சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமை செயலகத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 6 மணி முதல் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.மேலும், தலைமைச் செயலாளரின் மகன் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு தொடர்புடைய 13 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர தலைமைச் செயலாளரின் மகனுக்கு நெருக்கமான 5 தொழில் அதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. பெங்களூரு ,சித்தூர் ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை