அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் தொடங்கியது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை தொடங்கியது.
கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை