ஆண்ட்ராய்டு போனில் கூகுள் நிறுவனத்தின் ஜிபோர்டு ஆப்..!
கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கீபோர்டு ஆப்பான ‘ஜிபோர்டு’ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணையத் தேடுபொறித் தொழிநுட்பத்தில் புதிய யுத்திகளை அறிமுகம் படுத்தும் கூகுள் நிறுவனம் ‘ஜிபோர்டு’ மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஓஎஸ் இயங்குதளத்தில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஜிபோர்டு’ தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் பல புதிய அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
ஜிபோர்டில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஐகான் மூலம் கூகுள் தேடலை பயன்படுத்த முடியும். இதில் டைப் செய்ய பல அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் கீபோர்டு மூலம் தேடப்படும் அனைத்து செய்திகளையும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை