Header Ads

  • BREAKING



    முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம், பரபரப்பில் தமிழகம். உஷார்படுத்தப்பட்ட காவல்துறை.

    சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முன்னதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பியால் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தார். மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். முன்னதாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்.22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

    ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைகிறார்

    மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை அறிவதற்காக வித்யாசாகர் ராவ் இன்று இரவு சென்னை வருகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.

    மருத்துவமனை முன் பாதுகாப்பு அதிகரிப்பு 

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பலோ முன் அதிமுகவினர் குவிந்தனர். இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை முன் வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad