Header Ads

  • BREAKING



    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை: ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

    சென்னைதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆளுநர் வித்யாசாகர் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad