எனது உயிருக்குப் பாதுகாப்பில்லை: ராம மோகன ராவ்.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான ராம மோகன ராவ், தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், துப்பாக்கி முனையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரால் துப்பாக்கி முனையில் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன் என்று கூறினார். தனது வீட்டில் சோதனை நடந்ததைக் குறிப்பிட்டிருக்கும் ராம மோகன ராவ், சர்ச் வாரண்ட்டில் தனது பெயர் இல்லை எனவும் தெரிவித்தார்.
தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் சாசனத்தின் மீது நடந்த தாக்குதல் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். தான் இன்னும் தலைமைச் செயலாளராக இருப்பதாகவும் ராமமோகன் ராவ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை