Header Ads

  • BREAKING



    முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு மோடி வாழ்த்து.

    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் இன்று தனது 92-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தார்.

    முன்னதாக டிவிட்டரில் வாஜ்பாயிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, மக்களின் அன்பிற்குரிய வாஜ்பாய், நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

    வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில் இன்று பிறந்த நாள் காணும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad