Header Ads

  • BREAKING



    ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி: "ஈஸிபே' புதிய செயலி அறிமுகம்.

    தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பணப் பரிமாற்றத்துக்கான "ஈஸிபே' என்ற புதிய செயலியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

    இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மொத்த வணிகர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் தொழில்முறை சேவை வழங்குவோருக்காக "ஈஸிபே' என்ற புதிய செயலியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

    இதன் மூலம், வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசியிலிருந்தே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை அவர்கள் மேற்கொள்ளலாம். ஐ,சி.ஐ.சி.ஐ. வங்கியில் நடப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வங்கியின் வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும் உடனடியாக புதிய நடப்பு கணக்கைத் தொடங்கி இந்த வசதியைப் பெறலாம். 

    தற்போதைய நிலையில், இந்த புதிய செயலியை ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் ஐ.ஓ.எஸ். இயங்குதளம் கொண்ட செல்லிடப்பேசிகளுக்கும் இந்த செயலி விரிவுபடுத்தப்படும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad