Header Ads

  • BREAKING



    இத்தாலி பிரதமர் விரைவில் ராஜினாமா?

    ரோம் : இத்தாலி நாட்டின் பிரதமர் மட்டியோ ரென்சி விரைவில் ராஜினாமா செய்யலாம் என அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஓட்டெடுப்பு பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்ய பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்குவது என தற்போதைய இத்தாலி பிரதமரான மட்டியோ ரென்சி தீர்மானித்தார். இதற்காக, இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்துக்கு மக்களின் ஆதரவு என்ன? என்பது தொடர்பாக நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதனையடுத்து, அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக வரும் 4-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜினாமா : இத்தாலி பாராளுமன்றத்துக்கு வரும் 2018-ம் ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுவாக்கெடுப்பின் முடிவு எவ்வாறு அமையும்? என்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி, இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக 45 சதவீதம் மக்களும், எதிர்த்து 55 சதவீதம் மக்களும் வாக்களிக்ககூடும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், வரும் 4-ம் தேதி நடைபெறும் பொது வாக்கெடுப்பில் பிரதமரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அதிக வாக்குகள் பதிவானால் உடனடியாக இத்தாலி அதிபர் செர்கியோ மாட்டரெல்லாவை சந்தித்து மட்டியோ ரென்சி தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பார் என்று அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் கிரேஸியானோ டெல்ரியோ நேற்று குறிப்பிட்டுள்ளார்.எனினும், நாட்டின் ஆட்சி ஸ்தம்பித்து போய்விடாதபடி பாதுகாக்க வரும் 2018-பொது தேர்தல்வரை பதவியில் நீடிக்கும்படி மட்டியோ ரென்சியை அதிபர் கேட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மட்டியோ ரென்சி மறுத்துவிட்டால், இத்தாலியின் புதிய பிரதமராக வேறொருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை அதிபருக்கு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad