நடா புயல் எதிரொலி: தமிழகத்தில் பரவலாக மழை.
சென்னை: நடா புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மெரீனா பெசன்ட் நகர் கடற்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் படகை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுவினர் புதுச்சேரி விரைந்துள்ளனர்.பல்வேறு பகுதிகளில் மழை நடா புயலால் தொடர்ந்து நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம், நாகை, வேதாரண்யம், ஆயக்காரன் புலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில், தா.பழூர், ஜெயங்கொண்டம், திருமானூர், அரியலூர் பகுதிகளில் மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செங்கம், கலசபாக்கம் போலூர் பகுதிகளில் மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்புத்தூர் பகுதிகளில் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி, மதுரை மாவட்டத்தில் அண்ணா நகர், கேகேநகர், புதூர் பகுதி , திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், கொரடாச்சேரி, மாவூர் பகுதி , திருச்சி மாவட்டத்தில், லால்குடி, புள்ளம்பாடி, சமயபுரம் பகுதி , ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகமிலும் மழை பெய்து வருகிறது.
கருத்துகள் இல்லை