Header Ads

  • BREAKING



    சட்டவிரோத பணபரிமாற்றம்... சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் இருவர் கைது.

    சேகர்ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக சென்னையில் மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மஹாவீர் ஹிரானி, அஷோக் ஜெயின் ஆகிய இருவரும் சேகர் ரெட்டிக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகளை, புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அஷோக் ஜெயினிடமிருந்து ரூ.10 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேகர் ரெட்டிக்கு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக பரஸ்மால் லோதா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad