Header Ads

  • BREAKING



    குரங்குகளாலும் மனிதர்களை போல பேச முடியுமா?

    ரைஸ் ஆப் தி பிளானட் ஆப்தி ஏப்ஸ் எனும் பிரபல ஹாலிவுட் படத்தில் மனிதர்களைப் போன்று அறிவு பெற்ற குரங்கு ஒன்று கடைசியாகப் பேசவும் ஆரம்பித்து விடும். கற்பனைக் கதைதான் அது.
    ஆனால் உண்மையில் குரங்குகளால் பேச முடியுமா? என்ற கேள்விக்கு விடைகாண ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்ட போது ஒரு சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் மனிதர்களை விடப் பின்தங்கிவிட்ட குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. இந்த நிலையில் பல்வேறு வகையான குரங்குகளை ஆராய்ச்சி செய்த வியான்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை என்று பிரபல உயிரியல் ஆய்வாளரான டெக்கூமெஸ் பிட்ச் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad